குறுந்தொகையின் இந்த மூன்றாவது பாடலில், தலைவனுடனான தன் நட்பைப்பற்றி கூறுகிறாள் தலைவி, அவள் கூற்று மிக எளிமையானதாக, நமக்கு மிக பழக்கப்பட்டதாக இருக்கும், காரணம் (ஏறத்தாழ) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட தலைவியின் நட்பின் (காதலின்) தகைமை பின் வந்த பல கவிஞர்களாலும் எடுத்தாளப்பெற்றுள்ளது - காதலின் அளவு என்ன? இதோ தலைவியே கூறுகிறாள்...
(பாடல் : 3; திணை : குறிஞ்சி; துறை : தோழி தலைவனை இயற்பழித்தவழி, தலைவி இயற்பட மொழிந்தது)
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுதலைவனுடனான தன் காதல் மிகப் பெரியது, உயர்ந்தது, ஆழமானது என தலைவி தோழிக்கு உரைக்கிறாள், இதுவே “இயற்பட மொழிதல்” ஆகும் - இவ்வாறு கூறுவதன் தேவை என்ன? தலைவனின் காதல் மிக சிறியது, தாழ்ந்தது, மேலோட்டமானது (வெறும் உடற்கவர்சியால் உண்டானது, ஆகவே அவன் உன்னை வரைந்து கொள்ள [வரைவு - திருமணம்] மாட்டான்) என்று தோழி கூறுகிறாள், இது ”இயற்பழித்தல்” ஆகும், இதற்கு விடையாகவே தலைவி இயற்பட மொழிகிறாள். இயற்பழித்தல் - இயல்பை பழித்தல்; இயற்பட மொழிதல் - இயல்பை (தெளிவுற) உரைத்தல். இந்த இயற்பழித்தல்-இயற்படமொழிதல் தலைவனின் காதுபடவே நடக்கும் - அவன் தலைவியை காண மறைவான இடத்தில் காத்திருக்கையில் தோழியும் தலைவியும் இவ்வாறு உரையாடுவர் - அப்பொழுதுதானே அவன் நிலைமையை உணர்ந்து தலைவியை வரைந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வான்! (இதை துறை விளக்கமாக கொள்ளவும். இனி பாடலுக்கான் பொருள் உரைப்போம்...)
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
- தேவகுலத்தார்
(தோழி!) மலைப்பக்கத்தில் (சாரல்) இருக்கும் வலிமையான கொம்பினை உடைய (கருங்கோல்) குறிஞ்சிப் பூவின் தேனைக் கொண்டு பெரிய தேன்கூட்டை தேனீக்கள் கட்டும் (இழைக்கும்) வளத்தை உடைய மலை நாட்டின் தலைவனோடு (நாடன்) எனக்கு இருக்கும் நட்பானது (காதலானது) உலகைவிட (நிலத்தைவிட) பெரியது, வானைவிட உயர்ந்தது, கடலைவிட (’நீர்’ என்றது கடலைக் குறிக்கும்) அளவில் அரியது ஆகும்!
முன்னரே சொன்னது போல மிக எளிமையான சொற்களால், மிக பெரியதான கருத்தை சொல்லிவிட்டாள் தலைவி (இந்த இயல்பு பொதுவாய் சங்க இலக்கியத்தில் காணப்படும் ஒன்றாகும்!)
“நான் உன்ன ரொம்ப காதலிக்குறேன்...”
“ரொம்பனா எவ்ளோ?”
“பூமியவிட பெரிசு, வானத்தவிட மேல, கடலவிட ஆழமா...”
- இந்த பேச்சைப் பேசாது காதலிப்பவர்கள் எத்தனைபேர் உள்ளனர்?! இந்த வகையில் நம் எல்லோருக்கும் முன்னோடி (இரண்டாயிரம் ஆண்டுக்கும் முந்தைய முன்னோடி) குறுந்தொகை மூன்றாம் பாட்டின் தலைவிதானே?
”கருங்கோல் குறிஞ்சி” என்று ‘வலிமையான கொம்பை உடைய குறிஞ்சி செடி’என்றதன் வழியாக தம் நட்பு வலிமையானது, உறுதியானது என்னும் குறிப்பை தருகிறாள். மேலும், “பெருந்தேன் இழைக்கும்” என்று சொல்வது, ’தேனீக்கள் சிறுகச்சிறுக தேனை சேகரித்து பெரிய தேன்கூட்டை கட்டும், அது போல் எங்கள் நட்பும் கட்டப்படும்’ என்றும், ’தேனீக்கள் தேன்கூட்டை கட்ட பலகாலம் ஆகும், ஆனால் எங்கள் நட்போ பார்த்தவுடன் உண்டாகிவிட்டது, எனினும் தேன்கூட்டைப் போல பலகாலமாய் உண்டான ஒன்றைப்போலவே உணரப்படுகிறது’ என்றும் குறிப்பதாக கொள்ளலாம். (இவை ‘இறைச்சி’ எனப்படும், பாடலில் காட்டப்படும் இயற்கை வளக்காட்சியில் பாடல் தொடர்பான கருத்து அமைவது இறைச்சி ஆகும்!)
தோழி இயற்பழித்ததால் வரைவு நீட்டிப்பதன் (தாமதமாவதன்) துன்பத்தையும், தலைவி இயற்படமொழிந்ததால் அவள்தன் மீது கொண்டுள்ள காதலின் அளவையும் உணர்ந்த தலைமகன் இனியும் அவளை வரையாது இருப்பானா?
===
As said by the great Tamizh poet Thiruvalluvar, "...that which dwells deep in the smiles of the heart is true friendship (Couplet 786)", Love too is a form of Friendship - that's why both the terms 'Love' and 'Friendship' are used in the same sense in Kurunthokai. When the Heroine says 'the friendship with Hero' it does refers to her love with him.
In this third song of Kurunthokai, Heroine speaks about her friednship with the Hero, her saying will be very simple and very familiar, because what is said (roughly) two thousand years back regarding the nature of the friendship (love) of the Heroine has been used by many following poets - What's the measure of Love? Here, the Heroine herself says...
(Song : 3; Class : Kurinji; Scene Set : When Heroine's Friend degrades Hero (and his love), she replies praising him)
Greater than land, higher than skyThe Heroine tells her friend that my friendship with the Hero is greater, higher and deeper, this is "Praising the (Hero's) Nature" - what is the necessity for this? The friend says that the Hero's love is small, lowly and superficial (and is just due to lust, and so he will not marry you), this is "Degrading the (Hero's) Nature", the Heroine's praising-the-nature is the reply to this. These Degrading-the-nature and Praisign-the-nature will happen when the Hero is listening, while in hide waiting to meet the Heroine - Only then will he arrange to marry her, won't he! (Take this as the explanation for the Scene Set. Now let's see the meaning of the song...)
Rare in measure - than water that lie
With hillside dark-stem Kurinji flower
Big-hives building land-lord's friendship.
- Thevakulaththaar
(My friend!) My friendship (love) with the Lord of the land, which has the richness of bees that build big-hives using the (nectar from the) dark-stemed* Kurinji flowers, is greater than Earth (land), higher than sky, rare in measures than the deep sea! (water that lie - refers to sea) [*The exact word used in Tamizh is 'Karungoal' which means both dark-stem and strong-stem - a pun!]
As said before, the Heroine had expressed great things with simple words (this ability is a generally observed one in all of the Sangam litearture!)
"I love you so much..."
"So much means how much?"
"Greater than Earth, higher than sky, deeper than ocean..."
- How many lovers are there without having spoken these dialogues?! Is not the Heroine of Kurunthokai's third song the preceder of all of us in this regard? (A preceder by two thousand years!)
By "dark-stem Kurinji" which means 'strong stemmed kurinji' the Heroine mentions that theri love is strong and holding. Also, the saying "building big-hives" can be taken as to mean 'Bees collect small amounts of nectar to build big hives, likewise our friendship will be strongly built' and 'It will take a long time for the bees to build their hives, but our friendship was built at the very moment we met, yet it is felt as if it was a long-built one - like the bee hive' (These are called 'Iraichchi - Deep Meaning', an idea regarding the song, that is embedded in the portrait of natural wealth or beauty is known as 'Iraichchi')
Will the Hero - who heared the problems of delaying the wedding through her friend's Degrading-the-nature and the measure of the love the Heroine possess for him through her Praising-of-nature - delay to marry her anylonger?
மிகவும் அருமையாகவும் மிக மிக எளிமையாகவும் இருக்கிறது விஜய் உங்களது விளக்கம். துறை விளக்கம், இறைச்சிப் பொருள் போன்றவற்றை தனியாகச் சொல்லி பயமுறுத்தாமல் எளிமையான விளக்கத்தின் வழியிலேயே சொல்லிச் சென்றது மிக அருமை. மனதிலும் எளிதாக அமரும்.
பதிலளிநீக்குஉங்கள் விளக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இடுவதும் நன்று.
நட்பும் காதலும் என்பதைப் பற்றி வள்ளுவன் வாய்மொழியிலிருந்து துவங்கியதும் மிக நன்றாக இருக்கிறது. நள்ளுதல் என்றாலே விரும்புதல் என்று தானே பொருள். நாற்றம் என்ற பழஞ்சொல் தற்போது தன் பழைய பொருளை இழந்து தீநாற்றத்திற்கு மட்டுமே ஆனது போல் நட்பு என்ற சொல் தன் பழைய பொருளான காதல் என்ற பொருளை இழந்து தற்போது தோழமைக்கு மட்டுமே ஆனது போலும்.
இதுவரை 'முக நக நட்பது' குறட்பாவைப் படிக்கும் போது தோழமையை மட்டுமே தான் வள்ளுவப் பெருந்தகை குறிக்கிறார் என்று நினைத்திருந்தேன். அக்குறள் காதலுக்கும் பொருத்தமாக இருப்பதை இன்று உணர்கிறேன்.
குமரன்,
பதிலளிநீக்குபடித்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி... பல காலமாய் மரபுரை என்ற பெயரில் அருமையான இலக்கியங்களை பலருக்கும் சென்று சேரவிடாமல் தடுத்துவிட்டனர், அவற்றை அதிலிருந்து வெளிகொணர்ந்து, நற்றிணையையும், குறுந்தொகையையும் படிக்கையில் நான் அடைந்த முருகியல் இன்பத்தை (Aesthetic Pleasure)அனைவரும், குறிப்பாய் இளைஞர் சுவைத்துணர வேண்டும் என்பதே என் நோக்கம்... வள்ளுவர் மட்டுமல்ல, ஏறத்தாழ நம் இலக்கியங்கள் அனைத்துமே கற்க கற்க கற்கும் தோறும் புது புது கருத்துக்களை உணர்த்தி நிற்பவையே,
“...மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு”
“அறிதோறும் அறியாமை கண்டற்றால்...”
-என்றெல்லாம் வள்ளுவர் உரைத்தனர் அல்லவா...
தொடர்ந்து படித்து, கருத்திட்டு, ஆதரிக்க வேண்டுகிறேன்...
மீண்டும் நன்றி...