குறுந்தொகை - Kurunthokai

குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று, அவற்றுள் முதலில் தொகுக்கப்பட்ட நூல் என்ற பெருமைக்கும் உரியது. நான்கடி சிறுமையும் எட்டடி பெருமையும் கொண்ட நானூறு பாடல்களின் தொகுப்பு இன்னூல் (நூலில் மொத்தம் 402 பாடல்கள் உள்ளன; பாடல்கள் 307-ம், 391-ம் விதிவிலக்காய் ஒன்பதடி உடையன!)

என் அறிவிற்கு எட்டியவரை, நான் கற்றுணர்ந்தவரை இன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், உரை எழுதியும் இப்பதிவில் இடுகைகளாக இடவுள்ளேன் - படித்து மகிழ்க, மறக்காமல் தங்களின் மதிப்பான கருத்துக்களையும் பதிவு செய்க! நன்றி!

Kurunthokai is one among the Eight Anthologies, some of the oldest literature of Tamizh (c. 200 BC to 200 AD), and is probably the very first to be compiled. There are a total of 402 songs of 4 to 8 lines in length (songs 307 and 391 are exceptions with 9 lines.)

I am, with my very own perception and experience of reading these songs, going to post the English translation of these songs with necessary explanations in here - Read and enjoy, and don't forget to leave your valuable comments! Thanks!

இருமொழி வலை - Bilingual Blog

இந்த வலைதளம் தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தரப்பட்டுள்ளது. பெரும்பான்மை இரண்டு மொழியில் உள்ள செய்திகளும் ஒன்றேதான் (தமிழ் தகவு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) ஆகவே, தாங்கள், தங்களுக்கு விருப்பமான அல்லது வசதியான, ஒரு மொழியில் உள்ளவற்றை மட்டும் படித்தால் போதுமானது! (எனினும் தாங்கள் இருமொழி புலமையும் உடையவரெனின் இரண்டையுமே படித்து என் மொழிபெயர்ப்பைப் பற்றிய தங்கள் கருத்துகளையும் இடலாம்!) நன்றி!

This Blog is rendered in both Thamizh and English. The content in both the languages are, almost, the same (Tamizh version being translated in to English.) Hence, it would be enough if you read in one of the languages - as per your preference and convenience! (However, if you are well versed in both the languages then you can read both and leave your comments regarding the translation!) Thank you!

திங்கள், 21 ஜூன், 2010

அமைவிலர் - The Unset

இது வரையில் உவகைச் சுவையுடன் கூடிய அகப்பாடல்களைச் படித்து மகிழ்ந்த நாம் இப்பொழுது குறுந்தொகையின் நான்காவது பாவில் அவலச்சுவையை படிக்கப் போகிறோம்

சங்கவிலக்கிய அகப்பாடல்களின் பெரும்பான்மையாய் இருப்பது இவ்வகைப் பாடல்களே (ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு!), இதற்கு காரணம் இரண்டு என்பது என் கருத்து: ஒன்று, காதல் என்றதும் காதலர் கூடிய பொழுதில் இருக்கும் இன்பத்தையே நாம் உள்ளுகிறோம், எனினும் நடைமுறையில் காதலர் பிரிந்து ஒருவருக்காய் ஒருவர் ஏங்கும் நிலையே அதிகம்; இரண்டாவது, பிரிதலைக் உரிப்பொருளாகக் கொண்ட பாலை திணையானது (மற்ற திணைகளைப் போல்) தனக்கென தனியாய் ஒரு நிலம் உடையது அன்று, மற்ற நிலங்கள் (குறிப்பாய் குறிஞ்சியும், முல்லையும்) கெட்டு திரிந்த நிலையே பாலை நிலமாகும், இதனால் பாலைக்குரிய உரிப்பொருளானது மற்ற திணைகளுக்கும் வரும் அந்தந்த திணைகளின் உரிபொருட்களோடு இயைந்து.

அதாவது, குறிஞ்சியில் களவு புணர்ச்சியில் ஈடுபட இயலாது பிறரால் தடை ஏற்பட்டு காதலர் பிரிந்திருப்பர், முல்லையில் தலைவன் பணி காரணமாக தலைவியைப் பிரிவான், மருதத்தில் பரத்தை காரணமாகவும் ஊடல் காரணமாகவும் பிரிந்து இருப்பர், நெய்தலில் கடற்பயனம் செல்லும் தலைவன் தலைவியை பிரிவான் என இவ்வாறு பாலைக்குரிய பிரிதலானது மற்ற திணைகளில் நிகழும், அப்பிரிவில் எல்லாம் தலைவியும் தலைவனும் வருந்துவர்; எனினும், தலைவியின் பிரிவுத் துயரே பெரிதும் காட்டப்படுகிறது, (இங்கும் இரண்டு காரணங்கள்,  ஒரு பணி நிமித்தமாய் பிரியும் தலைவன் அப்பணியை மறந்து தலைவியின் பிரிவிற்கு வாடுவதாய் காட்டுவது அவனது தன்மைக்கு மாறாகும், மேலும், பிரிந்து செல்லும் தலைமகன் திணைக்குரிய நில எல்லைகளை கடந்து விடுவானாகையால் அவனைக் காட்டுதல் அந்தத் திணைக்குள் பாட்டை அடக்காது வழுவாக்கி விடும்.)

இனி, பாடலைக் காண்போம், வழக்கம் போல் குறைந்த, எளிய சொற்களில் பெரிய, ஆழ்ந்த செய்திகளைச் சொல்லிவிடுகின்றாள் தலைவி...

இவளைத் தலைவன் பிரிந்து சென்றுவிட்டானே, இப்பிரிவை இவள் எப்படித் தாங்குவாள்!என்று கவலையுற்ற தோழிக்குத் தலைவி தன் ஆற்றாமையை சொல்கிறாள்:

(பாடல் : 4; திணை : நெய்தல்; துறை : பிரிவை தாங்க மாட்டாள் என்று கவலையுற்ற தோழிக்கு தலைமகள் சொல்லியது)

நோம் என் நெஞ்சே! நோம் என் நெஞ்சே!
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே!
-காமஞ்சேர் குளத்தார்.

”என் மனம் வருந்துகிறது (நோம்)... என் மனம் வருந்துகிறது! என் கண்ணிமைகளைப் பொசுக்கி (தீய்ப்பன்ன) விடுவதைப் போல வரும் கண்ணீரை ஆற்றி (தாங்கி) என்னை அமைதிபடுத்த (அமைதற்கு) வேண்டிய (அமைந்த) என் காதலரே இன்று என்னை பிரிந்து இருப்பதால் (அமைவிலர் ஆகுதல்) என் மனம் வருந்துகிறது!

பாடலின் சொல் பயன்பாட்டு நயத்தை கவனித்தீர்கள்தானே...? ‘நோம் என் நெஞ்சேஎன்று மூன்று முறைக் கூறிய வழி தன் நெஞ்சு படும் துயரின் அளவை (அல்லது, அளவின்மையை?) காட்டுகிறாள் தலைவி!

அவர் கூட இல்லையே, என் நெஞ்சு வலிக்குதே... என் நெஞ்சு வலிக்குதே...என்று பேச்சு வழக்கில் புலம்பும் பாங்கு பாடலிலும் அப்படியே படம் பிடித்துக் காட்டபட்டுள்ளது!

இமை தீய்ப்பன்ன கண்ணீர் என்றதில் காதலரைப் பிரிந்த பொழுதில் வரும் கண்ணீர் எத்தனை வெம்மையானது (சூடானது) என்று சொல்லிவிட்டாள் அல்லவா? கண்ணிமையை பொசுக்கும் அளவிற்கு வெப்பமானதாய் கண்ணீர் உள்ளது என்னும் பொழுது அந்தக் கண்ணீரைப் போல பிரிவுத் துயர் தன்னை வாட்டுகிறது என்றே தலைவி குறிப்பிடுகிறாள்!

பாடலின் அமைப்பு அழகில் முதன்மை பெறுவது ‘அமைதல் என்ற சொல்லின் பயன்பாடே என்பது என் கருத்து. இந்த ஒரு சொல்லை மூன்று முறை வெவ்வேறு பொருள்களில் கையாண்ட தன்மையே பாடலைச் ‘சங்கவிலக்கியம்என்ற தகுதி நிலைக்கு கொண்டு செல்கிறது எனலாம், எப்படி?

முதலில் வரும் ‘அமைதற்குஎன்பது ‘என் துயரை களைந்து என்னை மகிழ்சியில் அமைத்தல் (மகிழ்வாய் இருக்கச் செய்தல் / ஆறுதல் அளித்து தேறுதல் செய்தல்) என பொருள் தருகிறது,

இரண்டாவது ‘அமைந்தஎன்பது ‘என்னை மகிழ்விக்க அமைந்த (மகிழ்விப்பதற்காக இருக்கும், எனக்கு கிடைத்த, நான் பெற்ற) என பொருள் தருகிறது,

மூன்றாவது, ‘அமைவிலர்என எதிர்மறையில் வருகிறது, இதிலுள்ள ‘அமைவுஎன்பது ‘என் மீதான அன்பு’, ‘என்னோடு கூடி இருத்தல்என்னும் பொருள் தந்து, ‘அமைவிலர்என்பது ‘என் மீது அன்பு இல்லாதவர்’, ‘என்னைப் பிரிந்தவர்என பொருள் தருகிறது,

இனி, இந்தப் பொருள்களை உள்வாங்கிக் கொண்டு ‘அமைதற்கு அமைந்தவர் அமைவிலர் ஆனார்என்பதை படிக்கையில் தலைவியின் துயருக்கான காரணமும், அத்துயரின் ஆழமும் தெற்றென விளங்கும்! துயரை போக்க வேண்டியவரே அத்துயருக்கு காரணமானார் எனின் அத்துயரை யார்தான் போக்க வல்லார்? அத்துயர்தான் தாங்குதற்கு எளிதோ? கண்ணைக் காக்கும் இமையை கண்ணீரே தீய்க்குமாயின் கண்ணை எதுதான் காக்கும்? (இமையை தீய்க்கும் கண்ணீர் என்ற சொற்கள் துயரின் வெம்மையை காட்டுவதோடு அன்றி, ‘அமைதற்கு அமைந்த காதலர் அமைவிலர் ஆக என்பதற்கான உவமையாயும் அமைதலை காண்க!)

இந்த இடுகையை படிப்பதில் தங்கள் நேரத்தை செலவிட்டமைக்கு மிக்க நன்றி, மேலும் சிறிது நேரத்தை செலவிட்டு தங்களின் மதிப்பான கருத்துக்களையும் இட்டுவிடுங்கள்!

***************************

Having enjoyed reading cheerful love songs by far, we now are going to taste lament in this fourth song of Kurunthogai

This type of (distress-expressing) songs constitute the major portion of the Sangam literatures (almost two third!), the reason, according to me, being two: Number one, the moment we encounter the word love, we think of the joys and pleasures lovers experience when they are together, however, pragmatically, lovers being longing for each other in partition is much more; Number two, ‘Paalai the love-class (of Tamizh literary tradition), which has ‘partition’ for its subject matter,  do not have (unlike the other four classes) an exclusive landscape for it, the deformed state of other landscapes (especially of Kurinji – the hills and Mullai – the forests) is referred to as Paalai land, thus the subject matter that belongs to Paalai will also find its place in all the other classes – in accordance to the subject matters of those landscapes.

That is, in Kurinji lovers will be parted, their clandestine union being disturbed by others, in Mullai the hero would part the heroine for the call of duty, partition in Marudham will be due to Prostitutes and Feigned-anger, and in Neithal the hero, going on a sea voyage, would part the heroine – thus partition occurs in all the landscapes, and the lovers would be lamenting during that; however, it is the heroine’s distress that is shown in greater number, (in Sangam literatures,) (here again for two reasons: To show the hero, who parts due to duty, to lament the heroine’s partition, without minding the duty, would be contradictory to his valor; And, since the hero, who parts, is very likely to go beyond the set boundaries of the particular landscape, picturing him would not contain the song within the particular class and would make it an erroneous one.)

Now, let us see the song, the heroine, as usual, expresses greater and deeper matters in lesser and simpler words…

The heroine tells to her friend, who is worried that ‘Oh! The hero had parted this lady, how will she ever bear this partition!’, thus:

(Song : 4; Class : Neidhal; Scene Set : Heroine telling to her friend who is worried that the heroine can not bear the partition) 

Pains my heart! Pains my heart!
To hold my eye-lid scorching tear
And set to set me – my lover
Being unset, pains my heart!
-Kaamanjerkulaththaar

“My heart suffers in pain... My heart suffers in pain! For my lover, who is set (to be there) to set (comfort / console) me – to hold (prevent) my tears that is hot enough to scorch my eye-lid, is now being unset (had parted me), and so my heart suffers in pain!”

You did note the elegancy of word usage in the song, didn’t you?
By repeating the words ‘Pains my heart’ three times the heroine shows the measure (or actually, the immeasurability) of the pain that her heart endures!

The very natural way of lamenting in spoken language - “Oh! He’s not with me, my heart pains… my heart pains…” - has been aptly captured in the song!

In saying ‘eye-lid scorching tear’ she had expressed how hot the tear becomes in her lover’s partition, hadn’t she? By saying that her tear is very hot such as to scorch her eye-lid the heroine remarks that the pain due to partition suffers her like that hot tear!

The use of the word ‘Set’ (in my translation; the word ‘Amaithal’ has been used in the Thamizh source – all the credits are to the source poet!) takes the prominent place, in my opinion, in the syntactic elegance (or the structural beauty) of the poem. We can say that the very use of this single word three times in different meanings lifts the song at par to the Sangam-literature-benchmark, how?

The first ‘set’ means ‘to dispel my pains and to set me in joy (to make me happy / to comfort and console me)’,

The second one means ‘being there (set) for me (him whom I got)’,

And the third one appearing in negation as ‘unset’, the ‘set’ in this meaning ‘love for me’, ‘being with me’ makes the term ‘unset’ to mean ‘loveless for me’, ‘being parted me’,

Now, having grasped those meanings, when we read the phrase ‘My lover, who is set to set me, became unset’ the reason and the depth of the heroine’s distress will become crystal clear! When the one, who is supposed to console the distress, becomes the very reason for it, who else can console? Nevertheless will that distress be easy to bear? When the eye-lid, which guards the eye, is being scorched by the tear itself, what else will guard the eye? (Note that the words ‘eye-lid scorching tear’, besides showing the severity of the distress, is also playing the role of a simile for ‘set to set me – my lover being unset’!)

Thanks, a lot, for spending your time reading this; please do spend a little more to post your invaluable comments!