குறுந்தொகை - Kurunthokai

குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று, அவற்றுள் முதலில் தொகுக்கப்பட்ட நூல் என்ற பெருமைக்கும் உரியது. நான்கடி சிறுமையும் எட்டடி பெருமையும் கொண்ட நானூறு பாடல்களின் தொகுப்பு இன்னூல் (நூலில் மொத்தம் 402 பாடல்கள் உள்ளன; பாடல்கள் 307-ம், 391-ம் விதிவிலக்காய் ஒன்பதடி உடையன!)

என் அறிவிற்கு எட்டியவரை, நான் கற்றுணர்ந்தவரை இன்னூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும், உரை எழுதியும் இப்பதிவில் இடுகைகளாக இடவுள்ளேன் - படித்து மகிழ்க, மறக்காமல் தங்களின் மதிப்பான கருத்துக்களையும் பதிவு செய்க! நன்றி!

Kurunthokai is one among the Eight Anthologies, some of the oldest literature of Tamizh (c. 200 BC to 200 AD), and is probably the very first to be compiled. There are a total of 402 songs of 4 to 8 lines in length (songs 307 and 391 are exceptions with 9 lines.)

I am, with my very own perception and experience of reading these songs, going to post the English translation of these songs with necessary explanations in here - Read and enjoy, and don't forget to leave your valuable comments! Thanks!

இருமொழி வலை - Bilingual Blog

இந்த வலைதளம் தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தரப்பட்டுள்ளது. பெரும்பான்மை இரண்டு மொழியில் உள்ள செய்திகளும் ஒன்றேதான் (தமிழ் தகவு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) ஆகவே, தாங்கள், தங்களுக்கு விருப்பமான அல்லது வசதியான, ஒரு மொழியில் உள்ளவற்றை மட்டும் படித்தால் போதுமானது! (எனினும் தாங்கள் இருமொழி புலமையும் உடையவரெனின் இரண்டையுமே படித்து என் மொழிபெயர்ப்பைப் பற்றிய தங்கள் கருத்துகளையும் இடலாம்!) நன்றி!

This Blog is rendered in both Thamizh and English. The content in both the languages are, almost, the same (Tamizh version being translated in to English.) Hence, it would be enough if you read in one of the languages - as per your preference and convenience! (However, if you are well versed in both the languages then you can read both and leave your comments regarding the translation!) Thank you!

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

அவனது நட்பு - His Friendship

"...நெஞ்சத்து அக நக நட்பது நட்பு (-குறள் 786)” என்று வள்ளுவர் சொல்லினார் அல்லவா, அந்த இலக்கணத்தின் படி காதலும் நட்பே ஆகும் - அதனால்தான் குறுந்தொகையில் ‘காதல்’ ‘நட்பு’ என்னும் சொற்கள் ஒரு பொருள் தருவனவாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தலைவனுடனான நட்பு என்று தலைவி சொல்வது அவனுடனான காதலையே குறிக்கும்.

குறுந்தொகையின் இந்த மூன்றாவது பாடலில், தலைவனுடனான தன் நட்பைப்பற்றி கூறுகிறாள் தலைவி, அவள் கூற்று மிக எளிமையானதாக, நமக்கு மிக பழக்கப்பட்டதாக இருக்கும், காரணம் (ஏறத்தாழ) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட தலைவியின் நட்பின் (காதலின்) தகைமை பின் வந்த பல கவிஞர்களாலும் எடுத்தாளப்பெற்றுள்ளது - காதலின் அளவு என்ன? இதோ தலைவியே கூறுகிறாள்...

(பாடல் : 3; திணை : குறிஞ்சி; துறை : தோழி தலைவனை இயற்பழித்தவழி, தலைவி இயற்பட மொழிந்தது)
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
           - தேவகுலத்தார்
தலைவனுடனான தன் காதல் மிகப் பெரியது, உயர்ந்தது, ஆழமானது என தலைவி தோழிக்கு உரைக்கிறாள், இதுவே “இயற்பட மொழிதல்” ஆகும் - இவ்வாறு கூறுவதன் தேவை என்ன? தலைவனின் காதல் மிக சிறியது, தாழ்ந்தது, மேலோட்டமானது (வெறும் உடற்கவர்சியால் உண்டானது, ஆகவே அவன் உன்னை வரைந்து கொள்ள [வரைவு - திருமணம்] மாட்டான்) என்று தோழி கூறுகிறாள், இது ”இயற்பழித்தல்” ஆகும், இதற்கு விடையாகவே தலைவி இயற்பட மொழிகிறாள். இயற்பழித்தல் - இயல்பை பழித்தல்; இயற்பட மொழிதல் - இயல்பை (தெளிவுற) உரைத்தல். இந்த இயற்பழித்தல்-இயற்படமொழிதல் தலைவனின் காதுபடவே நடக்கும் - அவன் தலைவியை காண மறைவான இடத்தில் காத்திருக்கையில் தோழியும் தலைவியும் இவ்வாறு உரையாடுவர் - அப்பொழுதுதானே அவன் நிலைமையை உணர்ந்து தலைவியை வரைந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வான்! (இதை துறை விளக்கமாக கொள்ளவும். இனி பாடலுக்கான் பொருள் உரைப்போம்...)

(தோழி!) மலைப்பக்கத்தில் (சாரல்) இருக்கும் வலிமையான கொம்பினை உடைய (கருங்கோல்) குறிஞ்சிப் பூவின் தேனைக் கொண்டு பெரிய தேன்கூட்டை தேனீக்கள் கட்டும் (இழைக்கும்) வளத்தை உடைய மலை நாட்டின் தலைவனோடு (நாடன்) எனக்கு இருக்கும் நட்பானது (காதலானது) உலகைவிட (நிலத்தைவிட) பெரியது, வானைவிட உயர்ந்தது, கடலைவிட (’நீர்’ என்றது கடலைக் குறிக்கும்) அளவில் அரியது ஆகும்!

முன்னரே சொன்னது போல மிக எளிமையான சொற்களால், மிக பெரியதான கருத்தை சொல்லிவிட்டாள் தலைவி (இந்த இயல்பு பொதுவாய் சங்க இலக்கியத்தில் காணப்படும் ஒன்றாகும்!)

“நான் உன்ன ரொம்ப காதலிக்குறேன்...”

“ரொம்பனா எவ்ளோ?”


“பூமியவிட பெரிசு, வானத்தவிட மேல, கடலவிட ஆழமா...”


- இந்த பேச்சைப் பேசாது காதலிப்பவர்கள் எத்தனைபேர் உள்ளனர்?! இந்த வகையில் நம் எல்லோருக்கும் முன்னோடி (இரண்டாயிரம் ஆண்டுக்கும் முந்தைய முன்னோடி) குறுந்தொகை மூன்றாம் பாட்டின் தலைவிதானே?

கருங்கோல் குறிஞ்சி” என்று ‘வலிமையான கொம்பை உடைய குறிஞ்சி செடி’என்றதன் வழியாக தம் நட்பு வலிமையானது, உறுதியானது என்னும் குறிப்பை தருகிறாள். மேலும், “பெருந்தேன் இழைக்கும்” என்று சொல்வது, ’தேனீக்கள் சிறுகச்சிறுக தேனை சேகரித்து பெரிய தேன்கூட்டை கட்டும், அது போல் எங்கள் நட்பும் கட்டப்படும்’ என்றும், ’தேனீக்கள் தேன்கூட்டை கட்ட பலகாலம் ஆகும், ஆனால் எங்கள் நட்போ பார்த்தவுடன் உண்டாகிவிட்டது, எனினும் தேன்கூட்டைப் போல பலகாலமாய் உண்டான ஒன்றைப்போலவே உணரப்படுகிறது’ என்றும் குறிப்பதாக கொள்ளலாம். (இவை ‘இறைச்சி’ எனப்படும், பாடலில் காட்டப்படும் இயற்கை வளக்காட்சியில் பாடல் தொடர்பான கருத்து அமைவது இறைச்சி ஆகும்!)

தோழி இயற்பழித்ததால் வரைவு நீட்டிப்பதன் (தாமதமாவதன்) துன்பத்தையும், தலைவி இயற்படமொழிந்ததால் அவள்தன் மீது கொண்டுள்ள காதலின் அளவையும் உணர்ந்த தலைமகன் இனியும் அவளை வரையாது இருப்பானா?

===

As said by the great Tamizh poet Thiruvalluvar, "...that which dwells deep in the smiles of the heart is true friendship (Couplet 786)", Love too is a form of Friendship - that's why both the terms 'Love' and 'Friendship' are used in the same sense in Kurunthokai. When the Heroine says 'the friendship with Hero' it does refers to her love with him.

In this third song of Kurunthokai, Heroine speaks about her friednship with the Hero, her saying will be very simple and very familiar, because what is said (roughly) two thousand years back regarding the nature of the friendship (love) of the Heroine has been used by many following poets - What's the measure of Love? Here, the Heroine herself says...

(Song : 3; Class : Kurinji; Scene Set : When Heroine's Friend  degrades Hero (and his love), she replies praising him)
Greater than land, higher than sky
Rare in measure - than water that lie
With hillside dark-stem Kurinji flower
Big-hives building land-lord's friendship.
              - Thevakulaththaar
The Heroine tells her friend that my friendship with the Hero is greater, higher and deeper, this is "Praising the (Hero's) Nature" - what is the necessity for this? The friend says that the Hero's love is small, lowly and superficial (and is just due to lust, and so he will not marry you), this is "Degrading the (Hero's) Nature", the Heroine's praising-the-nature is the reply to this. These Degrading-the-nature and Praisign-the-nature will happen when the Hero is listening, while in hide waiting to meet the Heroine - Only then will he arrange to marry her, won't he! (Take this as the explanation for the Scene Set. Now let's see the meaning of the song...)

(My friend!) My friendship (love) with the Lord of the land, which has the richness of bees that build big-hives using the (nectar from the) dark-stemed* Kurinji flowers, is greater than Earth (land), higher than sky, rare in measures than the deep sea! (water that lie - refers to sea) [*The exact word used in Tamizh is 'Karungoal' which means both dark-stem and strong-stem - a pun!]

As said before, the Heroine had expressed great things with simple words (this ability is a generally observed one in all of the Sangam litearture!)

"I love you so much..."

"So much means how much?"


"Greater than Earth, higher than sky, deeper than ocean..."


- How many lovers are there without having spoken these dialogues?! Is not the Heroine of Kurunthokai's third song the preceder of all of us in this regard? (A preceder by two thousand years!)

By "dark-stem Kurinji" which means 'strong stemmed kurinji' the Heroine mentions that theri love is strong and holding. Also, the saying "building big-hives" can be taken as to mean 'Bees collect small amounts of nectar to build big hives, likewise our friendship will be strongly built' and 'It will take a long time for the bees to build their hives, but our friendship was built at the very moment we met, yet it is felt as if it was a long-built one - like the bee hive' (These are called 'Iraichchi - Deep Meaning',  an idea regarding the song,  that is embedded in the portrait of natural wealth or beauty is known as 'Iraichchi')

Will the Hero - who heared the problems of delaying the wedding through her friend's Degrading-the-nature and the measure of the love the Heroine possess for him through her Praising-of-nature - delay to marry her anylonger?

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

கூந்தலின் மணம் - Hairs' Scent

"ஆயிரம் பொற்காசுகள்... ஒன்றா? இரண்டா? ஆயிரம் பொற்காசுகள்... எனக்கில்லை... எனக்கில்லை... சொக்கா!” என்று (தருமியாக நடிகர்) நாகேஷ் புலம்ப, மிடுக்காய் (மதுரை சோமசுந்தர கடவுளாக) நடிகர் திலகம் வந்து, கம்பீரமாய் வசனம் பேசிவிட்டு, படபடவென நாகேஷ் (தருமி) கேட்ட கேள்விகளுக்கு சடசடவென பதில் சொல்லி “ஐயா... நீர் புலவர்!” என்று காலில் விழும் நாகேஷிற்கு, சண்பக பாண்டியனின் ஐயத்தை (சந்தேகத்தை) நீக்கும், ஆயிரம் பொற்காசுகள் பரிசு பெற போகும் பாடலை கொடுத்துவிட்டு போவாரே... அந்தப் பாடல்தான் குறுந்தொகையின் இரண்டாம் பாடல்!

தலைவனோடு (களவுக்) காதலில் இருந்த தலைவி நாணத்தால் (வெட்கத்தால்) விலகி நிற்க, அவளின் நாணத்தை நீக்க எண்ணி அவளின் அழகை பாராட்டி உரைத்ததாய் இந்தப் பாடல் அமைந்துள்ளது:

(பாடல் : 2; திணை : குறிஞ்சி; துறை : தலைவியை நாணின் நீக்க தலைவன் அவளது நலம்பாராட்டியது)
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?
         - இறையனார்
பூவின் தாதை (கொங்கு/மகரந்தம்) ஆராய்ந்து (தேனை உண்ணும்) வாழ்வினை உடைய, அழகிய சிறகைப் (அம்+சிறை - அஞ்சிறை) பெற்ற வண்டே (தும்பி), என் மேல் உள்ள விருப்பத்தினால் (காமம்) எனக்குச் சார்வாய் சொல்லாது (செப்பாது) நீ உண்மையென்று அறிந்ததை கூறுவாயாக (மொழிமோ)! நீ அறிந்த பூக்களில் என்னோடு நெருக்கமான பழக்கத்தை (பயிலியது) கொண்ட (கெழீஇய: கெழுமை - உரிமை, ”கெழீஇ” என்றானது சொல்லிசை அளபெடை) நட்பை உடைய, மயில் போன்ற இயல்புடைய (மயில்இயல்) நெருங்கி அமைந்த அழகிய பற்களை (செறிஎயிறு: செறிவு - நெருக்கம், எயிறு - பல்) உடைய இந்தப் பெண்ணின் (அரிவை) கூந்தலைவிடவும் மணம் மிக்க (நறிய - நாற்றம் மிக்க; நாற்றம் - மணம்/வாசனை) பூ ஒன்று உள்ளதோ?

(அடைப்புக்குறிகளுக்குள் இருப்பதை விட்டுவிட்டு முதலில் படிக்கவும், பிறகு பாடலின் அருஞ்சொற்களுக்கு பொருள் தெரிந்துகொள்ள அடைப்புக்குறிகளுக்குள் உள்ளவற்றைப் படிக்கவும் - இம்முறை படிக்க எளிமையாக் இருக்கும்!)


தலைவியின் கூந்தலை விடவும் மணம்மிக்க பூ ஒன்று இல்லை என்பது இப்பாடலின் உட்கருத்து! ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா’ என்பதே சண்பக பாண்டியனின் ஐயம், ‘உண்டு’ என்பது மதுரை இறைவனின் கருத்து, ‘இல்லை’ என்பது புலவர் நக்கீரரின் வாதம் - அந்தச் சிக்கலுக்குள் நாமும் போக வேண்டா!

சண்பக பாண்டியனின் ஐயம், ஆயிரம் பொற்காசுகள் பரிசு, தருமியின் புலம்பல், இறைவன் வந்து உதவல், நக்கீரர் ஏற்றுக்கொள்ளாமை - இவை அனைத்தும் மிக பிற்காலத்தியதாகிய (~கி.பி. 17ம் நூற்றாண்டு) திருவிளையாடற் புராணத்தில் வரும் செய்திகள் - ஆனால் அதற்கு முன்னரே (~கி.பி. 6ம் நூற்றாண்டு) திருநாவுக்கரசர் தேவாரத்தில் இறைவன் சங்கப் புலவனாய் இருந்து பாட்டெழுதி தருமிக்கு அருளினான் என்னும் குறிப்பும் உள்ளது - எல்லாவற்றையும்விட குறுந்தொகை ஓலைச்சுவடியிலேயே பாடலின் ஆசிரியர் பெயர் ’இறையனார்’ என்று இருப்பதை காண்கிறோம் - இப்பெயர் மதுரை சோமசுந்தரரையே குறிக்கிறது! இனி, பாடல் குறித்து சொல்லப்பட்ட கதையை நம்புவதா வேண்டாமா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

பாடலின் சுவையை துய்ப்போம் (அனுபவிப்போம்) வாருங்கள்... தலைவியின் கூந்தலின் மணத்தைவிட நறிய பூ உள்ளதா என வண்டிடம் கேட்கும் தலைவன், அதற்கான பதிலை சொல்ல வண்டிற்கு (மட்டுமே) தகுதி உண்டு என்று குறிக்கும்விதமாய் ‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்றான் - பூக்களின் மணம் அவற்றின் தாதைப் பொருட்டு உண்டாவது, தாதை ஆராயும் வண்டே என்றதனால் பூக்களின் மணத்தை நன்கு அறிந்தது வண்டு என்றாகிறது. மேலும், அவ்வாறு பூக்களைப்பற்றி நன்கு அறிந்திருந்தாலும், தன் மீது உள்ள அன்பினால் வண்டு தனக்கு சார்வாய், தான் விரும்பியபடி (”தலைவியின் கூந்தலைவிட நறிய பூ இல்லை” என்று) கூறுவதாய் ஆகிவிடக்கூடாது என்பதற்காக “காமம் செப்பாது கண்டது மொழிமோ” என்றான், ஆக தகுதியான நடுவுநிலையான ஒரு வண்டு-நீதிபதியை தன் ஐயத்திற்கு தீர்வு சொல்ல அழைக்கிறான்! இந்தத் தீர்ப்பை ஏற்க யாரேனும் மறுப்பார்களா? (நக்கீரரைத் தவிர!)

இனி, தலைவியின் நாணை நீக்குதல் பொருட்டு அவளின் கூந்தல் நாற்றத்தை உயர்த்தி கூறத் துவங்கியவன் இடையில் அவளின் பிற இயல்புகளையும் பாராட்டுகிறான் - ‘பயிலியது கெழீஇய நட்பின்’ என்று “என்னோடு பழகுவது நிறைந்த நட்பினை உடையவள்” என்பதினால், பழக நாணி நிற்கும் தலைவிக்கு ‘என்னோடு பழக மிக்க உரிமை கொண்டவள் நீ, நீ நாணுதல் முறையாகாது’ என்று குறிப்பாய் உரைக்கிறான். ’மயில் இயலாள்’, ‘செறி எயிற்றாள்’, ‘அரிவை’ என்பவற்றால் அவளைக் கண்டபொழுதில் தனக்கு ஏற்பட்ட உள்ளக்கிளர்சியை, அதனால் உண்டான குழப்பத்தை உரைக்கிறான் - எப்படி?
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. -திருக்குறள் - 1081
என்ற காமத்துப்பாலின் முதல் குறளைக் கண்டால், தலைவியை முதன்முதலில் காணும் தலைவன் “இவள் தெய்வப்பெண்ணோ? (அணங்கு) அழகிய மயிலோ? கனமான குழை அணிந்த மானிடப் பெண்தானோ? என் மனது குழப்பத்தில் மாய்கிறதே!” என்று குழம்பித் தெளிவதை அறிகிறோம்.

இவ்வாறாக அவளின் நாணினை நீக்கி இன்பம் துய்த்தான் தலைவன் - இறையனார் என்ற நற்புலவரால் நாமும் தமிழின்பம் துய்த்தோம்!

இந்த இடுகையை படிப்பதில் உங்கள் நேரத்தை செலவிட்டமைக்கு நன்றி!

===

”Thousand gold coins... Not one, not two, but thousand... they're not for me... they're never for me... Chokkaa!" when Actor Nagesh (while in cast as Poet Tharumi) is lamenting so, Great Actor Shivaji (in cast as Madurai's Somasundarar - Chokkar) would come and speaking majestically, answering with quick-wit all of Nagesh's (Tharumi's) flash-wit questions and when he surrenders saying "Sir... you are a poet!", he would give him the song that could dispel Shenbaga Paandiyan's doubt... That is the song which is Kurunthokai's second one!

(For all those who are non-Tamizh's and have thus not understood the above paragraph:
The Song which is placed as Kurunthokai's second one has a legend attached to it - the song was said to be the one composed by Lord Shiva himself, and given to a poor poet named Tharumi, who then brings it to clear off King Shenbaga Paandiyan's doubt - "Whether woman's hairs have scent by its nature or is it due to using artificial scents?" - thereby claiming the one thousand gold coin reward the King had announced to whomsoever clearing the doubt of his.

At the royal Tamizh Court, Tharumi - and hence the song - was turned down by one of the prominent poets of the court, Nakkeerar by name, saying what the song conveys is wrong. This heats up the original composer, The Three-eyed Lord Shiva, and brings him to the court to argue. Nakkeerar argues against Poet Shiva even after the later revealing of his true form - and becomes exposed to the Third-eye of Lord Shiva, which scorches Nakkeerar into ashes.

All ends well when the other poets and the king begs Lord Shiva on behalf of Nakkeerar and Shiva brings back the brave poet to life and suggests to award the announced reward to poor poet Tharumi. Though doubtful of its origin and credibility, the story essentially conveys how the poets of the Tamizh Court were very strict in accepting only songs of good quality and good stuff! Huff! Such a story, thanks for reading, now back to Kurunthokai...)

When the Heroine is in clandestine union with the Hero, she steps aside because of her shyness, the song is what the Hero says in his attempt to dispel her shyness, by praising her beauty:

(Song : 2; Class : Kurinji; Scene Set : Hero praising the Heroine's goodness to dispel her shyness) 
Of Pollen examining life - pretty-winged bee!
Not of love, say what you do see;
With intimate friendship, peahen natured,
Tight-lined teethed, Than this maiden's hairs
More sweetly scented, are there flowers?
        - Iraiyanaar
Oh you beautiful winged bee, of a life full of examining the pollen (and consuming nectar) of flowers, without any biasing towards me, because of the affection you have on me, say what you know to be the truth! Among the flowers you know, are there flowers which are more sweetly scented than the hairs of this maiden, who has a thick intimate friendship with me, and who is like peahen and who has fine tightly lined teeth?

There is not a flower which is more scented than the heroine's hair is the message of this song! King Shenbaga Paandiyan's doubt is 'whether woman's hairs have natural scent', 'yes' is the opinion of Madurai's God (Lord Shiva - the composer of this song) and 'no' is the argument of poet Nakkeerar - let us not get into that divine dispute!

Shenbaga Paandiyan's doubt, thousand gold coin reward, Tharumi's lament, God coming to help, Nakkeerar's disagreement - all these are found in a very much later work (of c. 17th century) called Thiruvilaiyaadal Puraanam (The Epic of Shiva's Divine Plays) - however an earlier literature (c. 6th century) the Thevaaram, by the shaivite sage Thirunavukkarasar, mentions that Lord Shiva had been a Poet in the Tamizh Court and composed a song to help Tharumi - above all, Kurunthokai's original (palm leaf) manuscripts credits the song to an author named 'Iraiyanaar' - which refers to Lord Shiva of Madurai! I now leave the credibility of the legend associated with this song to your own discretion.

Come let us enjoy the taste of the song... The hero, who asks the bee whether there is a flower which is more scented than heroine's hairs, justifies that the bee (alone) is qualified to be the judge, by saying 'Of pollen examining life' - flowers' pollen is the reason for them to have scent, and a bee which examines the pollen will be knowing about the flower scent very well. Also, though the bee is greatly knowledgeable about flowers' scents, its judgment (that there is no flower that is more scented than heroine's hairs) should not be appearing as a prejudiced one - due to the affection of the bee towards the Hero, hence he says 'Not of love, say what you do see', thus he calls for a bee-judge who is well qualified and unbiased! Can anyone reject to accept this judgment? (Except Nakkeerar!)

Now, the hero who started to praise the scent of heroine's hairs, also praises her other natures - by saying 'With intimate friendship' he reminds her - who had stepped aside of union because of shyness - that 'you have the right to be with me and feeling shy is not suitable for you'. By the terms 'Peahen natured', 'Tight-lined teethed', 'Maiden' he expresses his emotions, and the confusions due to it, at his very first sight of her - how?
Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
Is she a maid of human kind? All wildered is my mind!
   - Thirukkural 1081 (Translation of Rev. Dr. G.U.Pope)
The above Kaamathupaal Kural (Part III - Love) lets us to know the hero's confusion, who asks "Is she a Goddess? or a peahen? or she, who wears rich ear jewels, is actually a human maiden? my mind perplex in confusion!" at his very first sight of the heroine.

Thus the hero dispelled her shyness and enjoyed union with her - we too tasted the joy of Tamizh (in English of course!) thanks to a fine poet named Iraiyanaar!

Thank you for spending your time reading this blog!

புதன், 7 ஏப்ரல், 2010

காந்தள் குன்றம் - The Kaanthal (Rich) Hill!

குறுந்தொகையின் முதல் பாடல், தலைவியை கண்டு காதல் கொண்ட தலைவன் அவளோடு தன்னை சேர்த்துவைக்க சொல்லி கொஞ்சம் காந்தள் மலர்களைத் தலைவிக்காக “கையுறையாக” (காதல் லஞ்சம்!) கொடுக்க, அதை வாங்க மறுத்து (அதன்வழி காதலுக்கு உதவவும் மறுத்து) தொழி கூறுவாதாக அமைந்த பாடல் இது.

(பாடல் : 1; திணை : குறிஞ்சி; துறை : தோழி கையுறை மறுத்தல்)

தலைவனின் கையுறையை மறுக்கும் தோழி அதற்கு தரும் காரணமும், அதை கூறிய விதத்தில் பொதிந்துள்ள ‘நக்கலும்’ மிகவும் சுவைக்கத்தக்கவை, முதலில் பாடலைக் காண்போம்...
செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை
கழற்றொடி சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே!
       - திப்புத்தோளார்
 (போர்க்)களம் செம்மை (சிவப்பு) ஆகும்படி அரக்கரை (அவுணர்) அழித்த (தேய்த்த) செம்மையான கோலையுடைய அம்பையும், செம்மையான தந்தத்தை (கோடு - கோட்டு) உடைய யானையையும் கொண்ட, அவிழ்கின்ற வீரவளையலை (கழற்றொடி - கழல்+தொடி : கழலுதல் - அவிழுதல், தொடி - வளையல்) கையில் அணிந்த சிவந்த நிறமுடையவனின் (சேய் - முருகன்) இந்த குன்றிலே குருதியைப் (இரத்தம்) போன்ற நிறமுடைய காந்தள் பூக்களின் கொத்துக்கள் (குலை) நிறையவே உள்ளன (அதனால் நீ தரும் காந்தள் கையுறை எங்களுக்கு அரிதல்ல, அது வேண்டாம்!)

‘நினது காந்தள்  எங்களுக்கு அரிதல்ல, முருகனுக்குச் சொந்தமான எங்கள் குன்றிலேயே அது நிறைய உள்ளது’ என்று கூறி தலைவனின் கையுறையை மறுத்த தோழி தனது சொல்லாட்சியின் திறத்தால் அக்கையுறையை சற்றே இழிவுபடுத்தியும் காட்டுகிறாள்! எப்படி?

’செங்களம்’, ’செங்கோல் அம்பு’, ’செங்கோட்டு யானை’, ’சேய் குன்றம்’ என்று போர்க்களம், அம்பின் கோல், யானையின் கோடு (தந்தம்), குன்று என இயல்பில் சிவப்பு அல்லாத அனைத்தையும் ’செம்மை’ என்று அடைகொடுத்து கூறிவிட்டு, இயல்பிலேயே சிவப்பான காந்தள் பூவை ‘செங்காந்தள்’ எனக்கூறாமல் ‘குருதிப் பூ’ (குருதி போல் சிவந்த பூ) என்று கூறுகிறாள்! இயற்கையாய் சிவப்பு நிறம் உடைய காந்தள் ‘குருதிப் பூ’வாம், குருதி பட்டதால் சிவப்பு நிறம் பெற்ற களமும், அம்பும், யானையின் கோடும் ‘செம்மை’யாம், இதைவிட அக்கையுறையை இழித்துக்கூற இயலுமா?

குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என அதன் உரையில் கூறினோம், அவ்வாறு அது சேர்க்கப்படாது இருந்திருந்தால் இந்தப் பாடலே (மறைமுக / குறிப்பு) கடவுள் வாழ்த்தாய் அமையும் தகுதி உடையது, காரணம் இது முருகப்பெருமானின் பெருமைகளைக் குறித்து நிற்கிறது!

முருகனும் அவனைச் சார்ந்தவையும் செம்மை உடையன என்பதைக் கடவுள் வாழ்த்தில் கண்டோம், “செம்மை” நிறம் இப்பாடலில் பொருள்செறிவோடு பயன்படுத்தப் பட்டிருப்பதையும், கடவுள் வாழ்த்தில் “செம்மை” என்பது நேரடியாய் குறிக்கப்படாமையும் காண்க!

===

Hero* sees Heroine* and falls in love with her and seeks the help of her friend to attain heroine's love and hands to her a bunch of Kaanthal flowers as a love-token, but the friend refuses his love-token (thereby refusing to help his love), Kurunthokai's first song is the reply of the heroine's friend refusing the love-token.

(Song : 1; Class* : Kurinji - Hills and its surroundings; Scene Set* : Heroine's Friend refusing Hero's love-token)

When Heroine's Friend refuses Hero's love-token, the reason she gave for that and the way she redicules the gift are very interesting ones, before going into them, let's see (my translation of) the song first...
Slaying demons making field red
With big-red-arrow, red-tusked elephant
Loose braceleted Red One's hill
Is rich with blood Kaanthal clusters!
    - Thippuththoalaar
This hill, which belongs to the Red One (Lord Murugan) who has the long red arrow and the red tusked elephant (both red are due to blood) that slayed demons (Soorabathman and others) in war making the battle field red (with blood) and who wears a loose bracelet in his hands (as a sign of his bravery), is rich with blood colored Kaanthal flowers (and so we don't need the flowers which you are giving as love-token!)

The Friend who refused the love-token saying, 'The Kaanthals you're giving us is not that rare to us, we do have it plenty in our hill - which belongs to Lord Murugan', is also rediculing the gift with her word-handling power! How?

She refers to the battle-field, arrow, elephant's tusk and her hill - which are not naturally red but are red in color due to blood-wetting - with the adjective 'Red' as 'Red Field', 'Red Arrow', 'Red Tusk' and 'Red One's Hill' respectively, but at the same time she's is referring to the Kaanthal - which is naturally red in color - as 'Blood Kaanthal' (meaning 'Kaanthal that is of blood's color' - i.e Red). Kaanthal which is actually red became 'Blood Kaanthal' and things which became red due to blood are said to be red, can there be a more elegant way to redicule the love-token?

It was already said that the Ode to God of Kurunthokai was composed in a later time (during the compilation of the book), suppose if it was not been composed, this song has the qualification of being the Ode to God (at least in a indirect way), for it mentions the might of Lord Murugan!

We saw, in the Ode to God, that Lord Murugan and things associated with him are red in color, and that fact is very intellectually used in this song. We should also note that the word 'red' is not directly used in the Ode to God (this holds for the Tamizh version; forgive me for inevitably using it in my translation!)

*These are some of the technical terms unique for Tamizh literature. If you don't get them, don't worry, I'll be soon writing a post explaining these.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

கடவுள் வாழ்த்து - Ode to God

எடுத்த செயல் இனிதே முடிய இறைவனின் அருள் துணையை நாடுவதே கடவுள் வாழ்த்தின் நோக்கமாகும். குறுந்தொகையின் இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடல் பிற்காலத்தில், அஃதாவது நூல் தொகுக்கப்பட்ட காலத்தில் எழுதப்பெற்றதாகும். இனி பாடலைக் காண்போம்:


தாமரை புரையும் காமர் சேவடிப்
பவளத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்
நெஞ்சுபக எறிந்த செஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே.
                        - பாரதம் பாடிய பெருந்தேவனார்
 தாமரை மலரைப் போன்ற (புரையும்) அழகிய (காமர்) சிவந்த காலடிகள் (சேவடி), பவழத்தைப் போன்ற (அன்ன) திகழ்கின்ற ஒளியை உடைய உடல் (மேனி), குன்றிமணியை போன்ற (ஏய்க்கும்) சிவந்த ஆடை (உடுக்கை), கிரவுஞ்சம்* என்னும் மலையின் (குன்றின்) நடுப்பகுதி (நெஞ்சு) பிளவு படுமாறு (பக) எறியப்பட்ட சிவந்த ஒளியை உடைய நீண்ட வேல் (செஞ்சுடர் நெடுவேல்), அழகிய (அம்-அழகு) சேவல் கொடி - ஆகிய இவற்றை உடைய முருகப்பெருமான் நிலையாய் காப்பதினால் இந்த உலகம் இன்பம் (ஏமம்) மிக்க நாள்களை (வைகல்) பெற்று மகிழ்கிறது!

இன்பத்தை (அக இன்பம்) சொல்லும் ஒரு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் அந்த இன்பமே இறைவன் அருளால்தான் கிடைக்கிறது என்று உரைப்பது எத்துனை பொருத்தம்!

இந்தப் பாடலில் முருகனுக்குரிய அனைத்தும் செந்நிறமாய் குறிக்கப்பட்டிருப்பதை காண்க, சிவந்த தாள்கள், சிவந்த மேனி, சிவந்த ஆடை, சிவந்த வேல், சேவல் கொடி - முருகனின் நிறமே செம்மைதான், அதனால்தான் அவன் சேயோன் எனவும் அழைக்கப்படுகிறான் (சே - செம்மை, சிவப்பு). இந்தக் கருத்தை நினைவில் கொள்க, அடுத்தப் பாட்டில் இது அழகாய் பயன்படுத்தப்பட்டுள்ளது!

*கிரவுஞ்சம் - ”குறிஞ்சி” (மலையும் மலை சார்ந்த இடமும்)  என்பதன் வடமொழி மருவு, சூரபத்மனுடனான போருக்கு முன் அவனுடய தம்பியின் கிரவுஞ்ச மலையை முருகன் தன் வேலால் அழித்தான்.
***

To seek God Almighty's blessed help in order to succeed in an assumed task is the aim of having an Ode to God in the beginning. This Ode to God of Kurunthokai must have been written later during the time of compilation of the book. Let us see (my translation of ) the song:

Lotus like beautiful red foot
Glowing coral like skin
Red-bean like attire, hill's
Chest cleft shining long lance
Pretty cock flagged - He guards
Joyous days avails this world!
- Perunthevanar, who sung Bhaaratham
 Lord Murugan - who has beautiful red feet like lotus flowers, skin that glows like red coral, clothes that are like red-bean, a long lance that had been waged such as to cleave and destroy the hill Kravuncham* and a pretty flag that bears cock in it - perpetually protects this world and hence it avails itself of joyful days!

A suitable Ode to God, that says that this world enjoys happy days because of God's blessing, for a book that talks about inner joys (of love - Agam.)

Note that in this song everything associated with Lord Murugan were remarked as being red in color, red feet, red skin, red dresses, red lance, red flag - Lord Murugan's color is Red, that's why he is also known as Cheayoan - meaning Red Colored One. It will be helpful to remember this point because it is used beautifully in the next song!


*Kravuncham - Must be the Samskrit derivative of "Kurinji" - which stands for Hilly region in Tamizh. Lord Muruga is said to have destroyed this hill with his lance before his war with the demon Soorabathman.